உதயநிதி மீது தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் புகார்! பரபரப்பை கிளப்பிய முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் என்பது டெங்கு, கொசு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்கப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

அவருடைய இந்த கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய கருத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதேபோன்று இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உத்தர பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநில காவல் நிலையங்களில் புகார் அளிப்பதோடு சில காவல் நிலையங்களில் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா சிவகங்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளோம். சனாதனம் குறித்த பேச்சிற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் சனாதனம் குறித்து பேசியவர்கள் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HRaja said complaint will be filed against Udhayanidi across TamilNadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->