மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம்...! - அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில்,பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று துணை முதலமைச்சர் 'உதயநிதி ஸ்டாலின்' பங்கேற்கிறார். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகை தந்தார்.

அவருக்கு கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி மற்றும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்றனர்.

கோவை ஆர்.எஸ்:

இதைத்தொடர்ந்து உதயநிதி காரில் புறப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தார்.அங்கு வாயிலில் அவரை கலெக்டர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

பிறகு,மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புல்வெளி தளத்துடன் அமையவுள்ள ஹாக்கி மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

அதன் பின்னர் அங்கு நடந்து வரும் விழாவில் ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதையடுத்து, ரூ.239.41 கோடி மதிப்பில் 25,024 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.இது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hockey field high school campus Deputy Chief Minister Udhayanidhi Stalin laid foundation stone


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->