#மதுரை || இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது.!!
Hindu makkal Katchi leader Arjun Sampath arrested
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சில அமைப்புகளள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே மதுரை ஆட்டோ போஸ்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் சில அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சித்த போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை கைது செய்து அழைத்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றுக்கொண்டது.
English Summary
Hindu makkal Katchi leader Arjun Sampath arrested