உயர்நிலை குழு உருவாக்கியது பெயருக்கு மட்டும் தான்...? -தமிழக அரசை கேள்விக்குள்ளாக்கும் நயினார் நாகேந்திரன் - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் பதிவு செய்ததாவது,"2021 சட்டசபை தேர்தலில், “தமிழகத்தின் கடன் சுமையை குறைத்து பொருளாதாரத்தை சீரமைக்க உயர்நிலை குழு அமைக்கப்படும்” என்று வாக்குறுதி எண் 25-ல் முதலமைச்சர் கூறியதை நினைவூட்டுகிறார்.

அந்த வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றினீர்களா முதலமைச்சரே?” என நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், பெயருக்கு ஒரு குழு அமைத்தாலே வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது எனக் கூற முடியாது என்றும், குழு அமைத்த பின்னரும் தமிழக கடன் ரூ. 9.29 லட்சம் கோடியாக ஏறியிருப்பது என்ன விளக்கம் என நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், கொடுத்த வாக்குறுதிகளைப் போலவே அந்த உயர்நிலை குழுவின் பரிந்துரைகளும் “காற்றில் கலந்துவிட்டன” என்று விமர்சித்துள்ளார். அரசு கஜானா ஊழல் ஒழுங்குகளால் சுரண்டப்பட்டு காலியாகி, மீதமுள்ள தொகை விளம்பர படப்பிடிப்புகளுக்காக மட்டுமே செலவழிக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி,மக்கள் கேள்வி எழுப்பும் போது மட்டும் “மத்திய அரசு நிதி தரவில்லை” என்று திமுக அரசு காரணங்கள் சொல்லி தவிர்க்கிறது எனக் கூறியுள்ளார். இவ்வாறான நிர்வாகத்தை தமிழக மக்கள் விரைவில் நிராகரிப்பார்கள் என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

high level committee formed just sake name Nayinar Nagendran questions Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->