தமிழக்தில் 05 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை மீண்டும் நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் முதல்வர் விஜய் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார்.

அடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். 

இதன் காரணமாக, திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் என 07 தொகுதிகள் காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய், கரூர் தொகுதியில் எம்ஆர் விஜயபாஸ்கர், விராலிமலையில் சி விஜயபாஸ்கர், பெருந்துறையில் ஜெயகுமார், அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் பொதுநல வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களைச் கேட்ட நீதிபதிகள் இந்தியத் தேர்தல் ஆணையம், இந்திய அரசு, தமிழகச் சட்டமன்றச் செயலாளர், பதவி விலகிய ஐந்து எம்எல்ஏக்கள் ஆகியோர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 31-ஆம் தேதி தள்ளிவைத்தனர். ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், விசாரணைக்கு வராததால், மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டித்த நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court extends ban on by elections for 05 constituencies in Tamil Nadu again


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->