மேகதாது விவகாரம்: "அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்''; தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்..!
Thirumavalavan insists on calling an all party meeting immediately
மேகதாது அணை விவகாரம் குறித்து காலம் தாழ்த்தாமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய போது திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது;
'வந்தே மாதரம்' பாடல் தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி மக்களவையில் அறிமுகப்படுத்திய சில நிமிடங்களில் அவையை ஒத்திவைத்துவிட்டார்கள் என்றும், கூச்சல் குழப்பங்களுக்கு இடையே மசோதாவை நிறைவேற்றி அவையை சபாநாயகர் ஒத்தி வைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கக்கூடிய சூழலில் 'வந்தே மாதரம்' பாடல் மசோதா பாஜகவிற்கு முக்கியமானதாக உள்ளது என்றும், தமிழ்நாட்டை சார்ந்தவர்களை தவிர வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மதச்சார்புடைய பாடல் என்பதால் 'வந்தே மாதரம்' பாடலை பாட வேண்டிய நிலை இல்லாமல் இருந்த நிலையில், இனிமேல் கட்டாயம் பாட வேண்டிய சூழல் உள்ளது.
'வந்தே மாதரம்' பாடல் மசோதா மதச்சார்பின்மைக்கு எதிரானது எனவும், பிற மதங்களை சார்ந்தவர்களின் உணர்வுக்கு எதிரானது. பாட மறுப்பவர்களை தண்டிக்கும் நோக்கத்தோடு ஒன்றிய அரசு இதனை செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிப்பதுதான் சட்டப்பூர்வமான முடிவு. ஆனால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க கர்நாடக அரசு தயங்குகிறது என்றும், பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு என காரணம் கூறுகிறதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரை சந்திக்க செல்கிறார். அவர் கர்நாடகா செல்வதை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், திட்டமிட்டவாறு முதலமைச்சர் கர்நாடகா செல்வதாக இருந்தது.
கர்நாடகவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா வரவேண்டாம் என அம்மாநில அரசு கூறியுள்ளது. இத்தகைய சூழல் ஏற்படும் என்பது முன்கூட்டியே கூறியதுதான். ஆனாலும், முதலமைச்சர், கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் நிலை குறித்து ஒன்றிய அரசுக்கு, காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு எடுத்து சென்று குறுவை விவசாயிகளின் நிலையையும், டெல்டா விவசாயிகளின் குமுறல்களையும் எடுத்துரைக்க வேண்டும் எனவும், விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசும், கர்நாடக அரசும் ஒருவருக்கொருவர் தங்கள் வலிமையை காட்டுவதற்கான பிரச்சினை அல்ல என்றும், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைதான் என்றாலும் ஒன்றிய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மிக மிக குறைந்த அளவில் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட கூறியும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், கர்நாடக அரசு மறுக்கிறததாகவும், மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால் காலம் தாழ்த்தாமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடலாம் என முதலமைச்சர் நினைத்திருக்கலாம். முதலமைச்சர் சந்திப்பு விவகாரத்தில் கர்நாடக அரசு இப்போது பின்வாங்குகிறது. திராவிடர் கழகம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரான இயக்கம் அல்ல. அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணக்கமாக இயங்குவது திராவிடர் கழகம்.
அத்துடன், நீட் ஒழிப்பு, EWS இடஒதுக்கீட்டுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழக வாகன பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏற்புடையதல்ல ஜனநாயக விரோத நடவடிக்கை என்று விசிக தலைவர் திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan insists on calling an all party meeting immediately