வாழ வழியின்றி தவிக்கும் மொராக்கோ இளைஞர்கள்; உயிரை பணையம் வைத்து கடலில் நீந்தி ஸ்பெயினுக்கு தப்பிக்கும் நெஞ்சை பதைபதைக்கும் காட்சி..!
Moroccan youth risk their lives to swim to Spain
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உயிரை பணையம் வைத்து கடலில் நீந்தி, அருகில் உள்ள ஸ்பெயினுக்கு செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொரோக்காவில் நிலவும் கடுமையான பஞ்சம், வேலையின்மை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக பெருமளவிலான மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சமடைகின்றனர். இதனால் இவர்கள் சட்டவிரோதமாக படையெடுப்பது செய்வது வழக்கமாகி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1500 இளைஞர்கள் மொராக்கோவில் இருந்து கடல் வழியாக அருகில் உள்ள ஸ்பெயின் நாட்டின் கியூட்டா (Ceuta) நகரை நோக்கி சென்றுள்ளனர். இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வருவதால் ஸ்பெயினில் அகதிகள் முகாம்கள் நிரம்பி வழிவதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Moroccan youth risk their lives to swim to Spain