த்ரிஷ்யம் படத்தை மிஞ்சிய கொலை வழக்கு; கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 12 அடி ஆழத்தில் புதைத்த கொடூர மனைவி; இரண்டு ஆண்டுகளுக்கு சிக்கியது எப்படி..? - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜிக்னேஷ் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக மனைவி பிரித்வி உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். 

இந்நிலையில், கணவன் ஜிக்னேஷின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டதால், ஜிக்னேஷின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை கேட்டுள்ளார். அதற்கு பிரித்வி, பதில் சொல்ல முடியாமல் சமாளிக்கும் நோக்கில் திணறிய படி பதில் அளித்துள்ளார். இதனால் அவருக்கு சந்தேகம் எற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிக்னேஷின் சகோதரர் அசோக், பிரித்வியிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியிருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த அசோக், தனது சகோதரரை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜிக்னேஷை கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அப்போது, மனைவி பிரித்வியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் திருமணத்திற்கு முன்பிருந்தே நிலேஷ் என்பவருடன் பிரித்விக்கு காதல் தொடர்பு இருந்ததும், திருமணத்திற்குப் பிறகும் அந்த உறவு தொடர்ந்ததும் தெரிய வந்துள்ளது. அந்தவகையில் தங்களது உறவுக்கு தடையாக இருந்த ஜிக்னேஷை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டதாகவும், அவர் அருந்திய மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் மனைவி பிரித்வி கூறியிருக்கிறார். 

ஜிக்னேஷ் உயிரிழந்த பிறகு, அவரது உடலை தொழிற்சாலை வளாகத்திற்கு கொண்டு சென்று, சுமார் 12 அடி ஆழமாக குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும், அதன்பின் அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அரண்டு போன போலீசார் ஜிக்னேஷ் புதைக்கப்பட்டதாக கூறிய தொழிற்சாலை வளாகத்திற்கு சென்று எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுத்து, டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கணவனை கொலையை செய்து விட்டு இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தினரை ஏமாற்றிய மனைவி பிரித்வி மற்றும் அவரது காதலன் நிலேஷை போலீசார் கைது செய்து இரயில் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்றப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did the cruel wife who killed her husband and buried him 12 feet deep in a love affair end up being caught by the police for two years


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->