உலகில் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு எது தெரியுமா?; இந்தியாவுக்கு எந்த இடம்..?
Which country attracts the most tourists in the world
உலகில் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக உள்ள இடம் குறித்தும், இந்தியா எந்த இடத்தில உள்ளது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்; அதாவது சமீபத்திய சர்வதேச சுற்றுலா புள்ளிவிவரங்களின்படி, பிரான்ஸ் பல ஆண்டுகளாக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக இன்றும் இருந்து வருகிறது.
பிரான்ஸ் ஏன் உலகின் முதல் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது என்று முதலில் பார்க்கலாம்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 102 மில்லியனுக்கும் (102 மில்லியன்) அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரான்சுக்கு வருகை தந்தனர். இதன் காரணமாகவே, 2025-ஆம் ஆண்டிலும் சுற்றுலாவில் பிரான்ஸ் முதலிடத்தில் நீடித்தது. இவ்வாறு அதிக சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் செல்வதற்கு முக முக்கியமாக காரணம் அங்குள்ள உலகப் புகழ்பெற்ற இடங்கள்தான்.
முக்கியமாக ஈபிள் கோபுரம், லூவர் அருங்காட்சியகம் மற்றும் பாரிஸில் அமைந்துள்ள அழகான பிரெஞ்சு ரிவியரா ஆகியவை உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கின்றன. இது தவிர, இங்குள்ள கிராமங்களின் அமைதியான சூழல், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் சுவையான பிரெஞ்சு உணவுகளும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.

அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உலகில் அதிகம் பார்வையிடப்படும் நாடக ஸ்பெயின் உளது. 2024-ஆம் ஆண்டில், சுமார் 93.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். ஸ்பெயின் அதன் வண்ணமயமான கலாச்சாரம், கடற்கரைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களுக்காகப் புகழ்பெற்றது.
03 வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 7.2 முதல் 7.9 கோடி சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அமெரிக்காவில், நியூயார்க் நகரம், கிராண்ட் கேன்யன், ஹாலிவுட் மற்றும் பல தேசியப் பூங்காக்கள் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகளுக்கான முக்கிய ஈர்ப்புகளாக உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 39-வது இடத்தில் உள்ளது.
English Summary
Which country attracts the most tourists in the world