ராகுல் காந்தி தமிழகம் வருகை; முதலமைச்சர் விஜய்யை சந்திக்க மாட்டார்..? வெளியான தகவல்..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார். அப்போது முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை என பயண திட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில், தமிழ்நாட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு கடந்த 23-ஆம் தேதி முதல், பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ்நாடு வரும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

இதற்காக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு  சென்னை விமான நிலையம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து மாமல்லபுரம் செல்வார் காலை 11 மணி முதல் மாலை 05 மணி வரை மாவட்டத் தலைவர்களுடனான கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

மாலை 05 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் செல்லும் ராகுல் காந்தி, இரவு 07;00 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது முதலமைச்சர் விஜயை ராகுல் காந்தி சந்திக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi will not meet Chief Minister Vijay during his visit to Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->