'தமிழகம் முழுவதும் கிராவல் மண் எடுப்பதற்கு சீர்திருத்தங்கள் அடுத்தவாரம் கொண்டுவரப்படவுள்ளது'; அமைச்சர் ர் டி.கே.பிரபு..!
Minister TK Prabhu says reforms for gravel extraction across Tamil Nadu will be introduced next week
தமிழகத்தில் கிராவல் மண் எடுப்பதற்கான சில சீர்திருத்தங்களை அடுத்த வாரம் கொண்டு வரவுள்ளதாக கனிம வளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் டி.கே. பிரபு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த கூட்டத்தில் அமைச்சர் டி.கே.பிரபு பேசும்போது கூறியதாவது;
அதிகாரிகள் தங்களது பதவி, அதிகாரத்தை மறந்துவிட்டு, மக்களின் குறைகளை, பிரச்சினைகளை காது கொடுத்து முதலில் கேட்க வேண்டும் என்றும், அந்தப் பிரச்சினைகள் மீது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நேர்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதைத்தான் பதவியேற்றதிலிருந்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்களுக்கான தவெக ஆட்சி உள்ளது என்றும், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் இந்த சீர் திருத்தங்களுக்கு ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது கூறியதாவது;
கனிமங்கள் வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை என்ற மக்களிடம் வரவேற்பை பெற்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை முதல்வர் விஜய் எடுத்துள்ளார் ன்றும், மக்களின் விருப்பத்தை தொடர்ந்து விஜய் நிறைவேற்றுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் தேங்கியுள்ள பல ஆயிரம் டன் கிராபைட்டை விற்க ஏற்பாடு செய்து வருகிறதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் கிராவல் மண் எடுப்பதற்கு சில சீர்திருத்தங்களை அடுத்த வாரம் கொண்டு வரவுள்ளதாகவும், மண்பாண்டத் தொழிலாளர்கள் மண் அள்ளுவதில் உள்ள இடையூறுகளும் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் ஊழலற்ற ஆட்சியை அதிகாரிகள் ஒத்துழைப்போடு சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ள்ளதாகவும், அமைச்சர் டி.கே.பிரபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister TK Prabhu says reforms for gravel extraction across Tamil Nadu will be introduced next week