குடிநீர், பயிர் சாகுபடிக்கு ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு; முதல்வர் விஜய் உத்தரவு..!
Chief Minister Vijay orders allocation of Rs 340 crore for drinking water and crop cultivation
குடிநீர் விநியோகம் மற்றும் பயிர்சாகுபடி பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூபாய்.340 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம், பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வினோத், நிதி அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, அணைகளின் நீர் இருப்பு, தற்போது வரை பெய்துள்ள தென்மேற்கு பருவமழை அளவு, நகர மற்றும் கிராமப் பகுதிகளின் குடிநீர் விநியோகம், வேளாண் பணிகள் மற்றும் குறுவை தொகுப்பு விநியோகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறுவைத் தொகுப்பு விநியோகப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்திய முதலமைச்சர் விஜய், குடிநீர் விநியோகப் பணிகளுக்கு 330 கோடி ரூபாய், கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளுக்கு 10 கோடி ரூபாய் என 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளின் செயல்பாடுகளை கண்காணித்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Chief Minister Vijay orders allocation of Rs 340 crore for drinking water and crop cultivation