காவல்துறையில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்த முதலமைச்சர் விஜய்; பட்டு வேஷ்டி சட்டையுடன் கலக்கல்..!
Chief Minister Vijay honored those who excelled in the police force with medals
தமிழக காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பட்டு வேஷ்டி சட்டையுடன் கலந்துகொண்டு காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகைளையும் முதல்வர் கண்டு மகிழ்ந்தார்.

அதற்கு முன்னதாக திறந்த ஜீப்பில் சென்று காவல் துறை அணிவகுப்பை முதல்வர் பார்வையிட்டதோடு, அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அத்துடன், நிகழ்ச்சியில் காவல் துறை வாகனங்களின் சேவையையும் முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் கடலோர காவல் படைக்காக 42 மஹிந்த்ரா ஜீப், 96 ஹோண்டா இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 665 காவல் துறை அதிகாரிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Chief Minister Vijay honored those who excelled in the police force with medals