மன வருத்தம்! 11 பேரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...! - பிரேமலதா விஜயகாந்த் 
                                    
                                    
                                   Heartbreaking I pray to God that souls 11 people may rest in peace Premalatha Vijayakanth
 
                                 
                               
                                
                                      
                                            தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கைஒன்று வெளியிட்டுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்:
அதில் அவர் தெரிவித்ததாவது,"18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, அந்த வெற்றியின் மகிழ்ச்சி நீடிக்காத வகையில் ஏற்பட்டுள்ள துயரமான சம்பவம், அனைவரையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தேமுதிக சார்பில் இறைவனை வேண்டி.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Heartbreaking I pray to God that souls 11 people may rest in peace Premalatha Vijayakanth