இந்த விஷயத்தில் திமுகவிற்கு தொடர்பில்லை என அறிவிக்க 'தில்' இருக்கா.? ஸ்டாலினுக்கு சவால் விடும் எச். ராஜா..!  - Seithipunal
Seithipunal


மிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈ.வெ.ராவோடு திமுக விற்கு தொடர்பில்லை என அறிவிக்க துணிவுண்டா? என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார். 

ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசிய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். பல தரப்பில் இருந்தும் ரஜினிக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வந்தார்கள். அதிமுக ஆரம்பத்தில் ரஜினிக்கு எதிராக பேசி வந்தது. அதிமுக அமைச்சர்களும் ரஜினி மீது கடுமையான கருத்துகளை முன் வைத்து பேசினார்கள். அதன் பின் ஏன் ரஜினி ரசிகர்கள் மவுனமாக இருக்கின்றனர் என்று ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் கேள்வி எழுப்பினர்.

Image result for h raja seithipunal

திராவிட கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ரஜினியை எதிர்த்து கொண்டிருக்கும் நிலையில், பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் ரஜினிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறது. அந்த வகையில், இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கு அதிமுகவுக்கு தைரியம் உண்டா என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார். 

தற்போது அதை, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவும் செய்திருக்கிறார். அதில் " முதலில் இவரது குடும்பம் நடத்தும் இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியை சமச்சீர் கல்வி பள்ளியாக மாற்றும் தைரியம் உண்டா துறைமுருகன் அவர்களுக்கு. ஊருக்கு உபதேசம் இனி செல்லாது " என்று கூறியிருக்கிறார்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja tweet for duraimurugan


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal