சீனாவுக்கு அடுத்தபடியாக மாபெரும் சாதனை...! 1,170 கி.மீ தொட்ட இந்திய மெட்ரோ...! - விரைவில் 2-வது இடம்...! - Seithipunal
Seithipunal


மெட்ரோ ரயில் சேவையில் இந்தியாவின் வளர்ச்சி வேகமெடுத்துள்ள நிலையில், உலக அளவில் மிகப்பெரிய மெட்ரோ ரயில் வலையமைப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா விரைவில் 2-ம் இடத்தை பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது.உலக அளவில் மெட்ரோ ரயில் வழித்தடங்களின் நீளத்தை அடிப்படையாகக் கொண்ட பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் சுமார் 11 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 1,386 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ ரயில் வலையமைப்புடன் 2-ம் இடத்தில் உள்ளது.இந்தியாவில் தற்போது 1,170 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் உலக அளவில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது.

நாட்டின் 26 நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை விட இந்தியா வெறும் 216 கிலோமீட்டர் மட்டுமே பின்தங்கியுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தது. அப்போது மொத்த மெட்ரோ ரயில் வலையமைப்பின் நீளம் 245 கிலோமீட்டராக இருந்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடங்களின் நீளம் 1,170 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, நாட்டின் பல்வேறு நகரங்களில் மேலும் சுமார் 900 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கட்டுமானப் பணிகளில் ஒரு பகுதி கூட பயன்பாட்டுக்கு வந்தாலே, இந்தியாவின் மொத்த மெட்ரோ ரயில் வலையமைப்பு அமெரிக்காவை எளிதில் கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் வலையமைப்பைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 2-ம் இடத்துக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளில் வேகமெடுத்துள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள், நாட்டின் நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்துக்கு முக்கிய அடையாளமாக உருவெடுத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

great achievement after China Indian Metro has reached 1170 km Soon 2nd place


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->