"ஓசி" தான பயன்படுத்திறீங்க! பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய திமுக எம்எல்ஏ! வைரல் வீடியோ - அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பேருந்தில் கட்டணமின்றி பயணம் பெண்களை பார்த்து, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ஓசி என்று அவமானப்படுத்திய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அதிமுக தரப்பில் விடுத்துள்ள கண்டன செய்தியில், "பெண்கள் செல்லும் பஸ் மற்றும் மக்களுக்கான சாலைகளை மக்கள் "ஓசி"யில் பயன்படுத்துவதாகக் கொச்சைப்படுத்தி பேசும் திமுக எம்எல்ஏ மகாராஜன்!

மக்கள் வரிப்பணத்தில் தானே சாலைகள் போடப்படுகின்றன?

DMK TRUST-ல் இருந்தோ, முரசொலி ட்ரஸ்டில் இருந்தோ பணம் எடுத்து, அதன் மூலம் மகளிர் பேருந்து விடப்படுகிறதா என்ன?

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களைப் பார்த்து "ஓசி" என்பது என்ன மனநிலை?

"ஆண்டான்" இவர்கள் என்றும் "அடிமைகள்" மக்கள் என்ற எண்ணம் தான் இவர்கள் DNA-வில் உள்ளது!

இப்படி "ஓஷி.. ஓஷி.." என்று சொன்னவர் நிலை இன்று என்ன? கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்டாலினால் கூட அவரை வைத்திருக்க முடியவில்லை. அது தான் மக்கள் சக்தி!

திமுக-வின் இந்த ஆணவப் பேச்சு வீழும்!
அதை 2026 தேர்தல் சொல்லும்" என்று தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt bus DMK MLA ADMk Condemn


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->