பறை இசைத்து அசத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!
Governor RN Ravi played Parai
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டடமலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் புதிதாகத் தொடங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (டிசம்பர் 12) திறந்து வைத்தார்.
பண்பாட்டு மையத் திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநர் ரவியை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்தரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியின்போது, வேலு ஆசான் பறை இசைக்க, 100-க்கும் மேற்பட்ட பறை இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பறை இசைத்து ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி மேடையேறி, தானும் பறை இசைத்து அங்கிருந்தவர்களை அசத்தினார்.
அதன் பின்னர், பாரதி பறை பண்பாட்டு மையத்தை ஆளுநர் ரவி குத்துவிளக்கு ஏற்றி, முறைப்படி திறந்து வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய இசை வடிவங்களில் ஒன்றான பறை இசைக்கும் ஒரு மையத்தை ஆளுநர் திறந்து வைத்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
English Summary
Governor RN Ravi played Parai