கோவில்பட்டியில் 5 சவரன் நகை பை தப்பியது…! நேர்மையான ஊழியரால் மீண்டும் உரிமையாளரிடம்...!
bag 5 sovereigns jewelry escaped Kovilpatti Returned owner by honest employee
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜிவ்நகர் 6-வது தெருவை சேர்ந்த லட்சுமி (65), கடந்த 9-ம் தேதி ஜோதிநகர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது தங்கச்சங்கிலி, இரண்டு தங்க வளையல்கள் உட்பட மொத்தம் 5 சவரன் நகைகளை ஒரு பையில் வைத்து கையில் எடுத்திருந்தார்.
ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, சீனி போன்ற பொருட்களை வாங்கும் போது, நகைகள் வைத்திருந்த பை அவரால் கவனக்குறைவாக தவறிவிட்டது.வீட்டுக்கு வந்தபோது தான் பை இல்லாததை உணர்ந்த லட்சுமி, அதிர்ச்சி அடைந்து பல இடங்களில் தேடித்தேடியும் எங்கும் கிடைக்காததால், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து ஏட்டு கழுகாசலமூர்த்தி ரேஷன் கடைக்கு சென்று ஊழியர் நாகலாபுரம் சீனிபாண்டியன் (55) அவர்களிடம் விசாரணை நடத்தியார். அதில், “9-ம் தேதி மாலை கடையை பூட்டும் நேரத்தில் மேஜை கீழ் கிடந்த பையை எடுத்துப் பார்த்தேன்.
அதில் நகைகள் இருப்பதை கண்டு, உரிமையாளர் தேடிவந்தால் திருப்பிக் கொடுக்கலாம் என பாதுகாப்பாக கடையிலேயே வைத்திருந்தேன்” என அவர் தெரிவித்தார். பின்னர் அவர் அந்தப் பையை போலீஸ் ஏட்டுவிடம் ஒப்படைத்தார்.
பின்னர் லட்சுமி மற்றும் கடை ஊழியரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் முன்னிலையில், ரேஷன் கடை ஊழியர் நகைகளை மூதாட்டியிடம் நேர்மையாக ஒப்படைத்தார்.
கடையில் தவறிய நகைகளை எந்தவித லாபத்தையும் நாடாமல் திருப்பிக் கொடுத்த ரேஷன் கடை ஊழியரின் நேர்மையை போலீசாரும் பொதுமக்களும் பாராட்டி வாழ்த்தினர்.
English Summary
bag 5 sovereigns jewelry escaped Kovilpatti Returned owner by honest employee