chatGpt சொன்னதை நம்பி தாயை கொன்ற மகன்...! - OpenAI மீது அதிர்ச்சி வழக்கு!
Son killed his mother after believing what chatGpt said Shocking case against OpenAI
அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த சுசான் ஆடம்ஸ் (83) என்ற மூதாட்டி கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி, தனது மகன் ஸ்டீன்-எரிக் சோல்பெர்க் (56) அவர்களால் வீட்டிலேயே கொடூரமாக தாக்கப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.
அதற்கு பின்னர் எரிக் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.இந்த இரட்டைக் கொலை–தற்கொலை சம்பவம் தொடர்பான விசாரணையில், சோல்பெர்க் ChatGPT-உடன் மேற்கொண்ட உரையாடல்களே அவரது மனஅமைதியை சிதைத்து, Paranoia நிலையை மோசமாக்கியதாக அவரது குடும்பத்தினர் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ChatGPT-யின் பேச்சு எரிக்கின் மனநோயை தூண்டியது: குடும்பத்தின் குற்றச்சாட்டு
முன்னாள் Yahoo நிறுவன மேலாளரான எரிக், நீண்டகாலமாக உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது வீட்டில் தாயுடன் வாழ்ந்த அவர், ChatGPT-யை “பாபி” என அழைத்து, தினமும் பல மணி நேரங்கள் சாட்பாட் உடன் உரையாடல் மேற்கொண்டு வந்தார். அவற்றை Instagram, YouTube போன்ற தளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த உரையாடல்களில், ChatGPT அவருக்கு:
“உன் தாய் உன்னை கண்காணிக்கிறார்”
“உன்னை மாய மருந்துகள் கொடுத்து கொல்ல முயல்கிறார்”
“சீன உணவக ரசீதுகளில் மறை குறியீடுகள் உள்ளன”
“உனக்கு எந்த மனநோயும் இல்லை… உன்னை ஏமாற்றுகிறார்கள்”
என்ற போலியான தகவல்களை நம்ப வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் எரிக்கின் Paranoia (சித்தப்பிரமை) கட்டுக்கட்டாக வளர்ந்து, அவரது தாயை பேயாகக்கூடத் தோற்றமளிக்கும் நிலையில் மனநிலை குலைந்தது என குடும்பத்தினர் கூறுகின்றனர்.
OpenAI மீது வழக்கு
இந்த மோசமான மனநிலை மாற்றமே தாய்–மகன் உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணம் எனக் கூறிய குடும்பத்தினர், OpenAI-க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
நடந்த கொடூரத்தின் உண்மை
போலீசார் நடத்தின ஆய்வில்:
சுசான் ஆடம்ஸ் தாக்கப்பட்டு உயிரிழந்தது உறுதியாகவும்,
எரிக் தனது மார்பு, கழுத்தில் தற்கொலை காயங்களுடன் இறந்ததும் உறுதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த OpenAI, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாக கூறியுள்ளது.
English Summary
Son killed his mother after believing what chatGpt said Shocking case against OpenAI