தேச சேவையின் தீபம் அணைந்தது! சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்...!
lamp national service gone out Chief Minister Stalin expresses deep condolences demise Shivraj Patil
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும், மக்களவையின் முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மரண செய்தி தீவிர துயரத்தை ஏற்படுத்துவதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியதாவது,"பொதுவாழ்வில் அரை நூற்றாண்டுக்கு மேலான அனுபவத்துடன், மக்களவைத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட பல பொறுப்புகளை மிகுந்த நேர்மை, திறமை, ஒழுக்கத்துடன் மேற்கொண்ட Statesman ஆனவர் சிவராஜ் பாட்டீல்.
தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த அவரது அன்பும் மரியாதையும் என்றும் நினைவில் நிற்கும். சமூகத்திற்கும், அரசியலுக்கும் பெரும் பங்களிப்பு செய்த அவருடைய மறைவு மிகுந்த இழப்பாகும்.
அன்னாரை இழந்த அவரது குடும்பத்தினர், நெருங்கியவர்கள், மேலும் காங்கிரஸ் இயக்க தோழர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.
English Summary
lamp national service gone out Chief Minister Stalin expresses deep condolences demise Shivraj Patil