"திறமைக்கு ரஜினியே உதாரணம்": ஷாருக்கான் பகிர்ந்த பழைய சம்பவம் தற்போது கவனம்!
actor sharukh khan rajini
நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை இன்று 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் உற்சாகமாகக் கொண்டாடினார். 75 வயதில், 50 ஆண்டுகால சினிமாப் பயணத்துடன் வாழ்நாள் சாதனையாளராக அவர் கம்பீரமாகத் திகழ்கிறார்.
இந்தச் சூழலில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 2014ஆம் ஆண்டு 'கோச்சடையான்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் குறித்துப் பேசிய ஒரு பழைய வீடியோ, அவரது பிறந்தநாளில் மீண்டும் கவனம் பெற்று வருகிறது.
ஷாருக்கான் பகிர்ந்த சம்பவம்:
ரஜினிகாந்தை தான் பார்த்ததிலேயே மிகவும் கனிவான, இனிமையான நட்சத்திரம் என்று ஷாருக்கான் பாராட்டினார். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்தார்:
"ரஜினி சார் ஒரு கண்ணாடி முன் நின்று, சிகரெட்டை கையிலிருந்து வாய்க்குத் தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். குறைந்தது 45 நிமிடங்களாவது அதைச் செய்திருப்பார். ஒவ்வொரு முறையும் சரியாகவே சிகரெட்டைப் பிடித்தார். ஆனாலும், முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. திறமையும் வெற்றியும் தொடர் முயற்சிகளால் வரக்கூடியது என்பதை அன்று நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்."
தன் நடிப்பாற்றலில் ரஜினி காட்டும் இந்தத் தொடர் முயற்சிதான், மூன்று தலைமுறையினரை அவர் ஈர்ப்பதற்குக் காரணம் என ஷாருக்கான் குறிப்பிட்ட இந்தக் கருத்து, ரசிகர்களால் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
actor sharukh khan rajini