சட்டசபையில் நிறைவேற்றிய ஒன்பது சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில், நிதி நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதா, கடந்த 2022 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், குறித்த மசோதாவில், சில குறைகளை சுட்டிக்காட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி வைத்தார். பின்னர். கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், 16 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு கடல்சார் வாரிய திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு மின் நுகர்வு விற்பனை வரி மீதான வரி திருத்த மசோதா, தமிழ்நாடு ஊதியம் வழங்கல் திருத்த சட்ட மசோதா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதிய உயர்வு சட்ட மசோதா, சிறு குற்றங்களுக்கு தண்டனைகளுக்கு பதிலாக அபராதம் விதிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட ஒன்பது சட்ட மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அத்துடன், மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய நிதி நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதாவுக்கும், ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor RN Ravi approves nine bills passed in the Assembly


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->