விவசாயிகளுக்கு குட் நியூஸ்! நெல் கொள்முதல் விலை ரூ.72 உயர்வு...! - பிரதமருக்கு எச்.ராஜா நன்றி...!
Good news farmer Paddy procurement price increased by 72 H Raja thanks Prime Minister
தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச் ராஜா தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டதாவது,"விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கவும், நாட்டின் நெல் உற்பத்தி வளர்ச்சியை தொடர்ந்து உயர்த்தும் நோக்கிலும் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி, ரூ.2,441 ஆக நிர்ணயிக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு விவசாயிகளின் உழைப்புக்கு உரிய மரியாதையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வேளாண் துறையில் புதிய நம்பிக்கையையும் உருவாக்கும் என அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி இந்த முக்கிய முடிவை எடுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் அவர்களுக்கும், விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Good news farmer Paddy procurement price increased by 72 H Raja thanks Prime Minister