#BigBreaking || சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க போகும் பாஜக.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. மாலை 3.00 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக 4 மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. 

இதில், கோவா மாநிலத்தில் பாஜக சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தற்போது 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், ஆம் ஆத்மி இரு இடத்திலும், சுயேச்சை-மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன

பெருபான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

தற்போது பாஜகவுக்கு 3 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் தேர்தல் வெற்றி அறிவிப்புகள் வந்த பின்னர், பாஜக தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

goa election 2022 bjp leading announce


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->