சென்னையில் சில நாட்கள் சாம்பார் வாளியோடு சுற்றியே ஸ்டாலின்.. தற்போது கோவை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து, மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். இதையடுத்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

இந்நிலையில். முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று கோவை செல்கிறார். அங்கு 89 கோடி ரூபாய் மதிப்பில் 120 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். மேலும், 500 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

இதையடுத்து, 440 கோடியில் 23 ஆயிரம் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.  திருப்பூரில் நாளை நடக்க உள்ள கொடிசியா முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை வெற்றிப்பயணம் ஆக மாற்ற திமுகவினர் உற்சாகத்துடன் களத்தில் இறங்கி உள்ளனர். பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே, ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து,  #GoBackStalin என்று பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Go Back Stalin trending for twitter


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->