"கவர்ச்சி மாயாஜால சுனாமி": தேர்தல் தோல்வி குறித்து மு.க. ஸ்டாலின் குமுறல்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காதது குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு "கவர்ச்சி மாயாஜால சுனாமி" என்று வர்ணித்தார். சுனாமி என்பது சாதனையல்ல, அது ஒரு பேரழிவு என்று குறிப்பிட்ட அவர், இந்த அரசியல் மாற்றம் தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கும் ஒரு சுனாமி பேரழிவு என்று எச்சரித்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு தனித்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதையும், தற்போதைய அரசு கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் இயங்குகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம் என்று கூறிய அவர், தோல்விக்குத் தலைவராகத் தானே முழுப் பொறுப்பேற்பதாக அறிவித்தார். வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்கும் பக்குவத்தை அண்ணாவும் கலைஞரும் தமக்குக் கற்றுக் கொடுத்துள்ளதாகவும், இந்தத் தோல்வி தற்காலிகமானது என்றும் தொண்டர்களுக்குத் தைரியம் கூறினார்.

தோல்விக்கான காரணங்களை ஆராயத் தலைமைக் கழகத்தின் சார்பில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும், அவர்கள் அடுத்த 20 நாட்களுக்குள் தொகுதி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கத் தனியாக ஒரு இணையதளம் (Website) நாளை தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் திமுகவின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், அந்த மாற்றம் கட்சியை அடுத்த நூறாண்டு காலத்திற்கு உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நிர்வாகிகளிடையே நிலவும் கோஷ்டி அரசியலைச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "என்னால் செயல்பட முடியாது" என்று நினைக்கும் நிர்வாகிகள் மனப்பூர்வமாகப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார். சமூக வலைதளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இனி வரும் காலங்களில் சட்டப்பேரவையில் ஒரு திறமையான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த அழுத்தம் கொடுப்போம் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த உரையின் மூலம் தோல்வியால் சோர்வடைந்துள்ள நிர்வாகிகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்க மு.க. ஸ்டாலின் முயன்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Glamorous Magic Tsunami MK Stalin on Election Defeat


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->