ஓபிஎஸ்.,க்கு ஆதரவு? இதான் காரணமா? ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal



செய்தியாளர் சந்திப்பு, "எப்போதும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். இந்த இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும் என்ற நோக்கில், அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்தேன்" என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு :


செய்தியாளர் : அதிமுகவில் பிரிந்து உள்ள அணிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?

ஜி கே வாசன் : நான் இன்று அரசியலில் நல்லதை மட்டுமே நினைப்பேன்.


செய்தியாளர் : அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், பாஜக போட்டியிட்டால் நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா?

ஜிகே வாசன் : ஏன் தவறான தகவலை கொடுத்து, கெட்டதை ஏன் நினைக்கிறீர்கள். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருவதற்கு முன்பால் உங்கள் யூகத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது.

அதிமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். நல்லது நடக்கும். அது உறுதியாக நடக்கும் என்று நம்புவோம்.

இந்த இடைத்தேர்தலில் வெற்றியை நாம் அறுவடை செய்து ஆக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. தமிழகத்தின் முதன்மை கட்சியான அண்ணா திமுக அதன் தலைமையில் வெற்றி பெறுவதற்காக வியூகத்தை கொண்டு வந்துள்ளோம்.


செய்தியாளர் : உங்களை எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, ஓ பன்னீர்செல்வமும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். ஆனால் நீங்கள் பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதாக தெரியவில்லையே?

ஜிகே வாசன் : தேர்தல் களத்தை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளீர்கள். தேர்தல் அறிவித்த அடுத்த 24 மணி நேரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முக்கிய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

செய்தியாளர் : திமுக ஆட்சி மீது உங்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கம்?

ஜிகே வாசன் : திமுகவின் இந்த ஆட்சி மக்கள் மீது நிறைய சுமையை ஏற்றி உள்ளது. அதற்கு சாட்சி தினம் தோறும் வெளியாகும் செய்திகள் தான்.

மேலும் திமுக தலைவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் மீதான அவநம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளார்கள்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GKVasan Say about OPS support issue


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->