யாருடன் கூட்டணி? அதிமுக, பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ஜி.கே வாசன்!
GKVasan said he will announce alliance at election time
பாஜக தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியதாக அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த அரசியல் கட்சிகள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி இடம் பெற்றிருந்த தமிழக அரசியல் கட்சியின் மத்தியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதா? அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் "நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஆறு மாத காலம் உள்ளதால் இடைப்பட்ட காலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கிலும், மக்கள் தொடர்பு அதிகரிக்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பே தக்க சமயத்தில் அறிவிப்போம்.
நாட்டு நலன் மக்கள் நலன் இயக்கத்தின் நலனை முன்னிறுத்தியே எங்கள் கூட்டணி முடிவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக தரப்பினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
English Summary
GKVasan said he will announce alliance at election time