மிகவும் வருத்தத்துடன் தமாகா தலைவர் ஜிகே வாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி.!! - Seithipunal
Seithipunal


முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி மறைவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் திரு.ஆர்.நாகசாமி அவர்கள் உடல்நிலை குறைவால் காலமானார் என்று செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் . 

கல்வெட்டுகளை ஆய்வு செய்து அவற்றை வருங்கால சந்ததியினர் எளிதாக அறிந்துகொள்ளும் விதமாக பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியுள்ளார் . 
தொல்லியல் துறையில் இவரின் சிறப்பான பணிக்காக மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அளித்து கௌரவித்தது . அதோடு சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்று பாதை குறித்த ஆய்வுப் பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர் . 

ஆய்வு பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து தொல்லியல் துறைக்கு புகழ் சேர்த்தவர் .  சிறந்த படைப்பாளி , அன்னாரது இழப்பு தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கும் , மாணவர்களுக்கும் பேரிழப்பாகும் .  திரு.ஆர் . நாகசாமி அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan mourning for r nagaswamy death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal