மாஸ் தலைவர் அண்ணாமலையை பங்கம் பண்ணும் முன்னாள் நிர்வாகி...!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அண்ணாமலையின் கீழ் செயல்படும் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் சில தினங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா என அண்ணாமலைக்கு சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை திமுக கூட்டணி வேட்பாளரை எதிர்க்க வலுவான வேட்பாளர்களை ஆதரிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். மேலும் எங்கள் கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என பேசி இருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேட்டி குறித்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டி விடவில்லை - சூசக தகவல், "கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான்" "அண்ணாமலை சொன்னது எந்த அதிமுகவை? ஓபிஎஸ் தரப்பையா? இபிஎஸ் தரப்பையா?" காவி vs கருப்பு, காங்கிரஸ் vs பாஜக, ஆன்மீகம் vs நாத்திகம், இது சரியான தேர்தல் மற்றும் சரியான நேரம், அண்ணாமலை பயப்படக்கூடாது. எப்படியும் பிப்ரவரி 7 வரை நேரம் உள்ளது. எதுவும் நடக்கலாம், ஆட்டம் மாறலாம் அண்ணாமலை, நீங்கள் பிரபலம் பாஜக சார்பில் அண்ணாமலை நிற்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

அதே போன்று மற்றொரு பதிவில் "அண்ணாமலையால் தான் தமிழ்நாட்டில் தேசிய கட்சி பாஜக வளர்கிறது என்று நீங்களும் உங்கள் வார் ரூமும் சொல்கிறீர்கள். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மற்ற கட்சியை பெரிய கட்சி என்று கூறினால், அப்போ மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஓப்டிக்ஸ் எல்லாம் நேரத்திலும் வேலை செய்யாது. சூசகமாக இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி என்ன பயன், நாடாளுமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளுக்கு பாஜக வெற்றி பெறும் எப்படி என்று வாக்குறுதி அளிப்பீர்கள்? அண்ணாமலை?" என தனது பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலையை விடாமல் விமர்சனம் செய்யும் காயத்ரி ரகுராம் மேலும் ஒரு பதிவில் "என் வழி தனி வழி என்கிறார் இபிஎஸ். பாஜகவை ஆதரிப்பேன் என்கிறார் ஓபிஎஸ். அதிமுகவை ஆதரிக்கிறேன் என்கிறார் அண்ணாமலை. 2024ஆம் ஆண்டுக்கான உண்மையான கூட்டணியை பிப்ரவரி 7ஆம் தேதி தான் தீர்மானிக்கும்" என பதிவிட்டுள்ளார்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மற்றொரு பதிவில் "அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளராக போட்டியிட்டால் எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் உங்களை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக நான் நிற்க துணிந்தேன். ஆனால் மிகப் பெரிய கட்சியை வைத்துக்கொண்டு மாஸ் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் போட்டியிட தயாராக இல்லை. 

உண்மை என்னவென்றால், களத்தில் இருவருக்கும் பூத் கமிட்டி அல்லது பூத் முகவர் இல்லை. உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்- நான் சுயேச்சை நீங்கள் ஒரு கட்சியின் தலைவர் ஆனால் என்னால் உங்களை வெல்ல முடியும்" என பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் பேட்டியை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவர்களுக்கே சவால் விடும் வகையில் காயத்ரி ரகுராம் அண்ணாமலையை கலாய்த்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri Raguram has been criticizing TN BJP president Annamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->