திரைப்படத்தையும் மிஞ்சிய கள்ளக்காதல் திருப்பம்...! - பாட்டியை கொன்று, கணவனை கொல்ல முயற்சி! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


கோவை அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன் (33). நிதி துறையில் (பைனான்ஸ்) பணிபுரியும் இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார்.அவரது மனைவி ஜாய் மெட்டில்டா (27), அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.

அதே நிறுவனத்தின் கிளைகள் கர்நாடகா மாநிலத்திலும் இயங்குகின்றன. அங்குள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, மிண்டிபல் பகுதியில் மேலாளராக இருந்தவர் நாகேஷ் (25). தொழில் தொடர்பான வீடியோ கால் உரையாடல்களே இருவருக்கும் நெருக்கத்தை உருவாக்கி, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.தொடர்ந்து நாகேஷ், கர்நாடகாவில் இருந்து அடிக்கடி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில், இருவரும் ஒரு தங்கும் விடுதியில் உல்லாசமாக தங்கி இருந்தபோது, லோகேந்திரன் நேரடியாக கையும் களவுமாக பிடித்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, நிதி நிறுவனத்தினர் இருவரையும் பணி நீக்கம் செய்தனர்.ஆனால் அதில் திருப்தி அடையாமல், இருவரும் மூச்சுத் திணற வைக்கும் தீய முடிவை எடுத்தனர்.கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி, லோகேந்திரன் மதுரைக்கு சென்றிருந்த நேரத்தில், ஜாய் மெட்டில்டா நாகேஷை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதை வீட்டில் இருந்த லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் கண்டித்து பேசினார். அதற்கு பதிலாக, இருவரும் சேர்ந்து தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத் திணறடித்து கொலை செய்தனர்.

பின்னர், “மாரடைப்பால் இறந்தார்” என போலி நாடகம் அமைத்து தப்பினர்.இதற்குப் பிறகு, ஜாய் மெட்டில்டா தனது கணவர் லோகேந்திரனையே அடுத்த இலக்காக திட்டமிட்டார்.கடந்த 22ஆம் தேதி, நாகேஷை மீண்டும் வரவழைத்து, 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு இருவரும் இணைந்து லோகேந்திரனை தூக்கில் போட முயன்றனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக லோகேந்திரன் தப்பி, நாகேஷ் பின்பக்க கதவு வழியாக ஓடி கர்நாடகாவுக்கு தப்பினார்.அதனைத் தொடர்ந்து லோகேந்திரன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் நாகேஷ் மறுபடியும் கஞ்சப்பள்ளி பகுதியில் காரில் வந்தபோது, ரோந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் மயிலாத்தாளை கொன்றதும், லோகேந்திரனை கொல்ல முயன்றதும் வெளிச்சத்துக்கு வந்தது.இதையடுத்து போலீசார் ஜாய் மெட்டில்டா மற்றும் நாகேஷை கைது செய்தனர்.கள்ளக்காதல், கொலை மற்றும் சதி கலந்த இந்த சம்பவம், கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fake love twist that surpasses movie Killing grandmother and trying husband What happened


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->