விஜய் கொரோனா காலத்தில் எங்கே...? தி.மு.க.வினர் மட்டும் தான் மக்களுடன் இருந்தனர்...! -அமைச்சர் கேள்வி
Where Vijay during Corona period Only DMK members were people Ministers question
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் நெல் அறுவடை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் இன்னும் சில நாட்களில் அறுவடை முழுமையடையும். இந்த மழைக்காலத்தில் விவசாயிகளும் நெல்மணிகளும் பாதிக்கப்படாதவாறு, தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைக்கு விவசாயம் குறித்தும் விவசாயிகளின் நலன் குறித்தும் பேசும் புதிய கட்சி தலைவர்கள், உண்மையில் அந்த துறையின் நுணுக்கத்தையும் நெஞ்சுரத்தையும் அறியாதவர்கள். சிலர் பச்சை துண்டுகள் கட்டிக்கொண்டு தாங்களே விவசாயிகள் என பாசாங்கு செய்கிறார்கள்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கூட்டணியில் சிலை கிடைக்க வேண்டுமென்பதற்காக தி.மு.க. அரசை விமர்சிக்கிறார்” என்றும் விமர்சித்தார்.அதனைத் தொடர்ந்து அமைச்சர் கேள்வி எழுப்பியதாவது,"த.வெ.க. தலைவர் விஜய், கொரோனா காலத்தில் எங்கே இருந்தார்? அந்த கடினமான நாட்களில் தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்கள், அத்தியாவசிய உதவிகள் வழங்கினர்.
கஷ்ட நேரங்களில் மக்களோடு இருப்பவர்கள்தான் உண்மையான தலைவர்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்” என்றார்.
இறுதியாக ,"இன்று விவசாயமும் விவசாயிகளும் அரசியல் உரையாடலின் மையப்புள்ளியாகி விட்டனர். அது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய விவசாய விழிப்புணர்வின் விளைவு. தமிழகத்தில் விவசாயத்தின் பெருமை மீண்டும் உயிர்த்தெழுகிறது” என்று பெருமையுடன் தெரிவித்தார்.
English Summary
Where Vijay during Corona period Only DMK members were people Ministers question