சோமாலியா அருகே எரிபொருள் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்; ஓர் இந்திய மாலுமி உட்பட 5 பேர் கொலை; 05 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான சோமாலியா அருகே கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் பணியில் இருந்த ஓர் இந்தியர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் ஓர் இந்தியர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய கடற்படை அளித்துள்ள தகவலை மேற்கொள்காட்டி, தி டெய்லி சோமாலியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த கடற்கொள்ளை  குறித்து குறிப்பிட்டுள்ளதாவது;

பலாவு நாட்டின் கொடியுடன் இயக்கப்பட்ட எம்டி ஹானர் 25 என்ற எண்ணெய் கப்பல், சோமாலியத் தலைநகரான மொகடிஷுவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பலில் 18,500 பீப்பாய் எரிபொருள் இருந்ததாகவும்,  கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் இருந்த நிலையில், இவர்களில், 10 பேர் பாகிஸ்தானியர்கள், 04 பேர் இந்தோனேஷியர்கள், இருவர் இந்தியர், ஒருவர் மியான்மர் நாட்டவர் என கூறப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நிலையில், சோமாலியாவின் புண்ட்லேண்ட் கடல்சார் காவல்படை வெற்றிகரமாக மீட்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனாலும், அதற்கு முன்பாகவே கடற்கொள்ளையர்கள் 05 பேரை கொன்றுள்ளதாகவும், அவர்களில், மூன்று பேர் பாகிஸ்தானியர்கள், ஒருவர் இந்தியர், ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்கள் எப்போது, எப்படி கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

அத்துடன், கடற்கொள்ளையர்களால் மூன்று பாகிஸ்தானிய பணியாளர்களும், ஓர் இந்தியரும் காயமடைந்துள்ளதாகவும், கப்பல் இப்போது பாதுகாப்பாகவும், புண்ட்லேண்ட் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 16 கடற்கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Five people including an Indian sailor killed during the hijacking of a fuel tanker near Somalia


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->