ஒடிசா : முதல் முஸ்லீம் பெண் எம்எல்ஏ - வரலாற்றில் இதுவே முதன் முறை..! - Seithipunal
Seithipunal



18வது மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. கடந்த 24 வருடங்களாக பிஜு ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தான் ஒடிசா முதல்வராக தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார். 

ஆனால் இம்முறை ஒடிசாவில் தனித்து களம் கண்ட பாஜக அங்குள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் முதன் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் தற்போது ஒடிசா சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு முஸ்லீம் பெண் எம்எல்ஏ வாகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சோபியா பிர்தவுஸ் என்று தெரிய வந்துள்ளது. இவர் ஒடிசாவின் பாராபதி கட்டாக் பகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 8001 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

32 வயதேயான சோபியா கலிங்கா இன்ஸ்டிடியூட்டில் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி படிப்பையும், பெங்களூருவில் IIM படிப்பையும் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சோபியா பிர்தவுஸ் ஒடிசா காங்கிரசின் மூத்த தலைவரான முகம்மது மொகிம்மின் மகள் ஆவார். 

தனது தந்தையின் தொகுதியில் தான் தற்போது சோபியா போட்டியிட்டு 'முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ' என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First Muslim Women MLA in Odisa in History


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->