பிரிஜ் பூஷண் மீது தேச துரோக வழக்குப்பதிவு?....ஆவேசமடைந்த வினேஷ் போகத்! - Seithipunal
Seithipunal


பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறிய போது,100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேலும் அரியானாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண், வினேஷ் போகத் இன்னொரு வீராங்கனைக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்து ஒலிம்பிக்கிற்கு சென்றதாகவும், அதற்காக கடவுள் அவரை தண்டித்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நான் ஒலிம்பிக்கில் வெற்றி பெறாததில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் கூறினால், அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும். என்றும், அந்த பதக்கம் எனக்கு சொந்தமானது அல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் சொந்தமானது. தேசத்தை அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

filing of treason against brij bhushan vinesh phogat is furious


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->