கெடு முடிந்ததது.! வாகன ஓட்டிகளே மறந்து விடாதீர்கள்.! நாளையே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


வாகன ஓட்டிகள் மறந்து விடாதீர்கள்.! நாளையே கடைசி.! 

நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும் போது ஃபாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி ஃபாஸ்டேக் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அட்டை மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது, கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் ஃபாஸ்டேக் அட்டை மூலம் பணம் வசூலிக்கப்பட்டு வாகனங்கள் விரைவாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது ஃபாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்காரி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

கால அவகாசம் கேட்டு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான அவகாசம் வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நாளையுடன் முடிகிறது. நாளை முதல்  தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்த ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FasTag must


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->