விவசாயிகளின் வலி குரல்! காவிரி டெல்டா இழப்பீடு விஷயத்தில் அரசை எச்சரித்த டி.டி.வி. தினகரன்...!
Farmers voice pain TTV Dinakaran warns government issue Cauvery Delta compensation
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், காவிரி டெல்டா பகுதிகளில் கனமழையால் கடுமையாக சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உடனடி கணக்கெடுப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,"காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் முழுமழை தாக்கம், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களையும், நெல் கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மூட்டைகளையும் மழைநீரில் நனைத்து வீணாக்கியுள்ளது.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திலும் மனஅழுத்தத்திலும் உள்ளனர்.தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், ‘33 சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டால்தான் இழப்பீடு வழங்கப்படும்’ என்ற வேளாண்மைத் துறை அறிவிப்பு, விவசாயிகளிடையே கோபத்தையும் ஏமாற்றத்தையும் கிளப்பியுள்ளது.
ஒரு ஏக்கர் நிலத்தில் விதை, உரம், தொழிலாளர், இயந்திர வாடகை போன்ற செலவுகளைச் சேர்த்து குறைந்தபட்சம் ₹36,000 வரை செலவாகும். ஆனால் அரசு வழங்கும் இழப்பீடு உற்பத்திச் செலவுக்கு ஏற்ற அளவில் இல்லை.
எனவே, அந்த இழப்பீட்டு தொகையை தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப உயர்த்துவது அவசியம் என்று டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.எனவே, 33 சதவிகித நிபந்தனையை மறுபரிசீலனை செய்து, மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், பயிர் காப்பீட்டு நிறுவனங்களுடன் உடனடியாக ஆலோசித்து, காப்பீட்டுத் தொகைகளை விரைந்து வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தினார்.
English Summary
Farmers voice pain TTV Dinakaran warns government issue Cauvery Delta compensation