டாஸ்மாக் அடி கட்டளைகள்! MRPக்கு மேல் விற்பனை செய்ய முடியாது... தினசரி கண்காணிப்பு கடுமையாக!
TASMAC orders Cannot sell above MRP Strict daily monitoring
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத் துறையின் (TASMAC) அனைத்து மதுபானக் கடைகளுக்கும் அதிகபட்ச விலை மீறாமல் மதுபானங்களை விற்பனை செய்ய கடுமையான விதிமுறைகள் அறியத்தரப்பட்டுள்ளது. அதிகாரிகள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"
முக்கிய நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள்:
மதுபான விற்பனை: ரொக்கம், கார்டு (PoS) மற்றும் யுபிஐ (UPI) மூலமாக நடக்கும் அனைத்து விற்பனைகளும் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) முறையாக பின்பற்றி மட்டுமே செய்யப்பட வேண்டும். வேறுபாடு ஏற்பட கூடாது.
அதிக விலை வசூல் தடுப்பு: MRPஐவிட அதிக தொகை வசூலிக்கப்பட்டால், அந்த கூடுதல் தொகையை விற்பனைக்கான தொகையிலிருந்து கழித்து மட்டுமே வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்; வேறு வழியில் சேர்க்கக் கூடாது.

பரிவர்த்தனை பதிவுகள்: ரொக்கம், கார்டு, UPI மூலமாக விற்பனை செய்யப்பட்ட தொகைகள் தனி பதிவில் பராமரிக்கப்பட வேண்டும். கடை பணியாளர்கள் தினசரி விற்பனை விவரங்களை ஒப்பீடு செய்து மாற்றங்கள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
Digital Transaction அதிகரிப்பு: மாவட்ட மேலாளர்கள் கடைகளில் PoS மற்றும் UPI பயன்படுத்துதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; புதிய கடைகள் திறக்கும் போது கூட அவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
கணினி மயமாக்கல் பயன்பாடு: கையடக்க கருவிகளில் விற்பனையை ஸ்கேன் செய்து PoS/UPI மூலமாக பணம் வசூல் செய்ய வேண்டும்; தவறான முறையில் ஒரு மொத்த தொகையை பெறக்கூடாது.
தினசரி கண்காணிப்பு: ரொக்கம், கார்டு, UPI மூலம் விற்பனை செய்யும் பணம் சரியாக வங்கி கணக்கில் சென்றதா என ஒவ்வொரு நாளும் சரிபார்க்க வேண்டும்; குறைபாடுகள் உள்ளதானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கொள்கை நடவடிக்கைகள் குறைபாடு கண்டால்:
குறைவாக வசூல் செய்த தொகையை முழுமையாக வசூல் செய்ய வேண்டும்.
குறைவான தொகைக்கு 50% அபராதம் மற்றும் 2% மாதவட்டி விதிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட வரியுடன் சேர்த்து GST வசூல் செய்யப்படும்.
தகவல் சமர்ப்பிப்பு: அனைத்து மாவட்டங்களின் மதுபான விற்பனை விவரங்கள், மின்மயமாக பெறப்பட்ட தொகை, ரொக்கமாக பெறப்பட்ட தொகை ஆகியவை தினசரி படிவங்களில் தொகுத்து முதுநிலை மண்டல மேலாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
மாவட்ட மேலாளர்கள் பொறுப்பு: குறைவுகள், வேறுபாடுகள் இருப்பின் அன்றே ஆய்வு செய்யப்பட வேண்டும். முதுநிலை மண்டல மேலாளர் தினமும் கண்காணித்து முழுமையாக நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும்.
அறிக்கை சமர்ப்பிப்பு: மாதந்தோறும் 7-ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட மேலாளர்களும், முதுநிலை மண்டல மேலாளர்களும் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டும்.
English Summary
TASMAC orders Cannot sell above MRP Strict daily monitoring