அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

அவர் சட்டமன்ற உறுப்பினராக சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற சில நாட்களிலேயே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய மகன் திருமகன் ஈவேரா மறைந்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நலம் சரியாகி  வந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார் எனவும்  லேசான தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS elangovan tested covid positive


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->