விருப்பமில்லாவிட்டாலும் தலைமையின் தீர்ப்பே இறுதி...! - மாணிக்கம் தாகூர் உறுதியான செய்தி
Even if there no decision leadership final Manickam Thakur positive message
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதி பங்கீட்டைச் சுற்றிய அரசியல் இழுபறி தொடர்ந்து சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. “கேட்ட தொகுதிகள் கிடைத்தால் தான் கூட்டணி தொடரும்” என்ற உறுதியான நிலைப்பாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் இருப்பதாகவும், “வரட்டும் பார்க்கலாம்” என்ற அமைதியான கணக்குப் போக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால், தனது மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை தி.மு.க. இன்று வெளியிடத் தயாராகியுள்ளது.
கூட்டணிக் கணக்குகளை இறுதிப்படுத்தும் முனைப்பில் கட்சி வேகமெடுத்துள்ளது.இதற்கிடையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சிக்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் காங்கிரஸுடன் நடைபெறும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் மட்டுமே, அந்தக் கட்சிக்கும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அரசியல் பின்னணியில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கருத்து வேறுபாடுகள் மனித இயல்பே. ஆனால் எந்த தனிநபரையும் விட கட்சியே உயர்ந்தது.
தலைமையினர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்காமல் போகலாம். இருந்தாலும் ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை.
ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு, கூட்டணிக்குள் ஒற்றுமையை வலியுறுத்தும் அரசியல் சைகையாக பார்க்கப்படுகிறது.
English Summary
Even if there no decision leadership final Manickam Thakur positive message