சீமான் மீண்டும் ஆஜராக வேண்டும்! ஈரோடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Erode district court orders Seeman to appear again oct10
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது அருந்ததியர் இன மக்களை இழிவாக பேசியதின் காரணமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இது செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகேசன் அவர்கள் விடுமுறை என்பதால் பொறுப்பு நீதிபதி மாலதிமுன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
ஆனால் புகார் மனுதாரர் ஆஜராகாததால் சீமானை மீண்டும் அக்டோபர் 10ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். இதனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் ஈரோடு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Erode district court orders Seeman to appear again oct10