இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணாக்காதீங்க.. உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும்.. இ.பி,எஸ் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற கிராமத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி, பாதுகாப்பு பணியில் காவல் உதவி ஆய்வாளர் மார்கரேட் தெரசா உட்பட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். 

கோவில் திருவிழா முடிந்த நிலையில். அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றிய ஆறுமுகம் என்பவருக்கும் காவல் உதவி ஆய்வாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆறுமுகம் திடீரென காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். 

இதையடுத்து அருகில் இருந்த காவல்துறையினர் விரைந்து சென்று ஆறுமுகத்தை கைது செய்ததுடன், காவல் உதவி ஆய்வாளர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது. 

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும் காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் எனவும், இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps tweet for nellai police issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->