அந்த கஷ்டம் ஸ்டாலினுக்கு ஒருபோதும் வராது! சத்தமில்லாமல் திமுகவை பங்கம் பன்னிய முதல்வர் பழனிசாமி!
EPS replies to duraimurugan
தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
கூட்ட தொடரின் நான்காவது நாளான இன்று (19/02/2020) சட்டப்பேரவையில், தமிழக அரசின் கடன் அதிகரித்து இருப்பது அடுத்து வரும் திமுக ஆட்சியில் எங்கள் தலைவருக்கு கஷ்டத்தை உண்டாக்கும் என பேச, விவாதத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் கடன் குறித்து திமுக கவலைப்பட வேண்டாம் என்றும், அந்த வாய்ப்பு உங்களுக்கு வராது எனவும், சத்தமே இல்லாமல் திமுக அடுத்து ஆட்சிக்கு வராது என மறைமுகமாக, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகனுக்கு பதிலளித்தார்.
மேலும் தற்போதுள்ள ரூபாய் 4 லட்சம் கோடி கடன் என்பது 10 ஆண்டுக்கு முன் இருந்த ரூபாய் 1 லட்சம் கோடிக்கு சமம் என்றும் கூறினார். இதனிடையே பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சு மிட்டாய் போல் உள்ளது என்றார்.
English Summary
EPS replies to duraimurugan