சொந்த தொகுதியிலேயே.. ஈபிஎஸ் செய்த சம்பவம்! இரு முக்கிய புள்ளிகளுக்கு ஆப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிராகவும், அவ பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிர்வாகிகளை அதிரடியாக அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி விடுகிறார்.

அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியைச் சேர்ந்த இரு முக்கிய நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிய சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை உழைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கடகத்திற்கு களங்கமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்;

சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி நகர் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளர் கந்தசாமி, மற்றும் எடப்பாடி நகர் கழகம் முன்னாள் துணைச் செயலாளர் உத்திரராஜா ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்திருக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS removed two AIADMK officials from Edappadi town


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->