மிரட்டும் திமுக அமைச்சர்களால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சி பாதைக்குள் செல்லும்..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!!
EPS question how will TN enter the path of develop by threatening DMK ministers
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் பணிக்குழு பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் 111 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

அவர்களுடன் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு ஆலோசனைகளை தேர்தல் பணி குழுவினருக்கு வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அமைச்சர்களே பொதுமக்களை மிரட்டும் தோணியில் பேசும்பொழுது அவர்களால் எப்படி தமிழ்நாடு வளர்ச்சி பாதைக்குள் செல்லும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
EPS question how will TN enter the path of develop by threatening DMK ministers