இறங்கி அடிக்க தயாராகும் ஈபிஎஸ்! கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்திய நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெற உள்ள நிலையில் தென்னிந்திய மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் முதற்கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை வரும் நவம்பர் 10ஆம் தேதிக்குள் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் மாவட்ட நிர்வாகிகளுக்கு என உத்தரவிட்டுள்ளார். மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி முகவர்களை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்வுக்கான பணிகளை முழுவீச்சில் தொடங்கிவிட்டதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS ordered sent polling agents list before nov10


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->