அதிமுக அலுவலகம் செல்லும் முன்பே எடப்பாடி பழனிசாமியை தடுக்க முயற்சி -  டிஜிபிக்கு பறந்த கடிதம்! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த மோதலை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், 72 நாட்களுக்கு பிறகு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை அதிமுகவின் தலைமைக் அலுவலகமான 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வர இருக்கிறார்.

அலுவலகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்களான, அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., செல்வி ஜெ ஜெயலலிதா  ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். 

இந்நிலையில், அதிமுக அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் அனுமதிக்க கூடாது என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுருக்கும் நிலையில் இறுதி தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்க கூடாது" என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS in ADMK Head Office After 72 days


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->