அமைச்சர் பேசிய ஆடியோவால் திமுக பதறுகிறது.! புயலை கிளப்பிய ஈபிஎஸ்.!! 
                                    
                                    
                                   EPS criticized MKStalin DMK in dharmapuri
 
                                 
                               
                                
                                      
                                            தர்மபுரியில் அதிமுக சார்பில் 100 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இலவச திருமண நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி "சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். அதிமுக பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பது போன்று கூறுகின்றனர். 

பாஜக உடனான கூட்டணிக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் திமுகவினர் கூட்டணியில் இருப்பது போல பிதற்றுகின்றனர். தர்மபுரி விவசாயிகள் நிறைந்த மண். அதிமுக ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், திமுகவும் தான்.
ஆனால் தற்போது நீட் தேர்வை எதிர்ப்பவர்களும் இவர்களை தான். என்ன வேடிக்கை பாருங்க. தமிழ்நாட்டில் அதிக கொலை, கொள்ளை நடைபெறும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

திமுக அமைச்சர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியாகி இருந்தது. அதில் 30 ஆயிரம் கோடி ரூபாயை உதயநிதியும் சபரீசனும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக பேசி இருந்தார். திமுக இப்படி கொள்ளையடிக்க ஊழல் செய்து கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்" என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       EPS criticized MKStalin DMK in dharmapuri