சர்க்கஸ் அரசுக்கு பொம்மை முதல்வர்.. அடுத்தடுத்து என்ன போராட்டம் வருமோ.!! போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் முழுவதும் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செயல்படும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையத்தில் இருந்து தென் சென்னை முழுவதும் மெட்ரோ கொடு நீர் வினியோகம் செய்யப்பட்டது. அதில் ஒரு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்து காணப்படுகிறது.

இதனை சரி செய்யாமல் லாரிகளுக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் லாரிகள் தண்ணீர் நிரப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தண்ணீர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு தமிழக அரசுதான் காரணம் என குற்றம் சாட்டி எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த விடியா ஆட்சியில், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் தொமுச-வினர் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தை நடத்தினர். அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கபடாதால் இன்று மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோர் திடீர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது. 

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத, உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர் , இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்ய வேண்டிய நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticized DMK govt and MKStalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->